இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2019

திருமண பொருத்தங்கள் ஒரு விளக்கம்

ஒரு ஆணோ, பெண்ணோ இந்த பூமியில் பிறக்கும் போதே அவர்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யபடுவது போல அவர்களின் ஏழாமிடமும் நிர்ணயம் செய்யபடுகிறது. ஏழாமிடம் நிர்ணயம் செய்தவுடன் அவர்களின் திருமண வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. நம் முன்னோர்கள் வேத சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு, ராசி நட்சத்திரங்களை உள்வாங்கி அடிப்படை பொருத்தங்களை வரையறை செய்துள்ளனர். பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஆண் மற்றும் பெண்ணின் குணநலன்களை ஆராய்ந்து பொருத்தங்கள் கணக்கிடபடுகிறது. நம் முன்னோர்கள் கடைபிடித்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது. பண்டைய காலத்தில் பல்வேறு பொருத்தங்கள் (20 பொருத்தங்கள்) பார்த்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் பத்து பொருத்தங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது.


பத்து பொருத்தங்களின் விவரங்கள்:

மேலும் இரண்டு முக்கிய பொருத்தங்கள்:


இந்த பத்து பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜி, வேதை ஆகிய ஆறு பொருத்தங்கள் மிகவும் முக்கியம். 
சிலர், தினம், கணம் ஆகியவற்றில் ஒன்றும், மகேந்திரம், ராசி, நாடி ஆகியவற்றில் ஒன்றும்,
ரஜ்ஜி, வேதை யோனி ஆகிய மூன்றும் இருந்தால் இருந்தால் மட்டும் போதும் என்று திருமணம் செய்கின்றனர்.
அனைத்து பொருத்தங்களை காட்டிலும் ரஜ்ஜி பொருத்தம் என்பதே மிகவும் முக்கியமானது, ரஜ்ஜு பொருத்ததில் பல வகைகள் உள்ளன. அவற்றை முழுமையாக பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.

ஆண் மற்றும் பெண் இருவரின் லக்னத்தை வைத்து அவர்களுக்கு லக்ன பொருத்தம் பார்க்கபடுகிறது, 4, 6, 8, 12 ம் லக்னமாக இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை. இலவச லக்ன பலன்களை அறிய இங்கே அழுத்தவும்... 

இந்த பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் மட்டும் தான். ஆண், பெண் இருவரின் முழு ஜாதகம், குறிப்பாக ஏழாம் வீடு, களத்திற காரகன், தசா புத்திகள் ஆகிய அனைத்தும் பார்த்து திருமணம் செய்தால் தான் சிறப்பு. திருமண பொருத்ததில் மிகவும் அனுபவம் பெற்ற ஜோதிடர் திரு.ஸ்டாலின்  அவர்களை அணுகி உங்கள் ஜாதக பொருத்தங்களை தெரிந்து கொள்ளலாம். 

திருமண பொருத்தம் மற்றும் வரன் தொடர்பான விவரங்களுக்கு எங்களை அணுகுங்கள்.


தொடர்புக்கு 
ஸ்ரீ சக்ரா திருமண தகவல் மையம் 

நிர்வாகி : திரு. சி.ஸ்டாலின்
2/430 ராஜாஜி தெரு 
அப்பா பைத்தியம் சாமி கோயில் எதிரில்
ஜங்ஷன் மெயின் ரோடு 
சேலம் - 636005
செல்: 9677794979
            9443745467


EMAIL : stalinsonu23@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக